Chennai kavithai in tamil – இந்த தொகுப்பில் சென்னையை புகழ்ந்தும் மற்றும் சென்னையை பெருமையை தெரிவிக்கும் வகையிலும் சென்னை பற்றிய கவிதையை காணப்போகிறோம்.
சென்னை கவிதைகள் | Chennai kavithai in tamil
1. சிங்காரச் சென்னை அழைக்குது வா உன்னை வந்தாரை எல்லாம் அன்பாய் வாழ வைக்கும் அன்னை.
2. தேடி வந்தவர்களை எல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்க கடலின் ஓரம் கொண்டு அங்கு போக பலருக்கு ஒரு நேரமுண்டு கலைப்பாக வந்தவர்களை இளைப்பாற்றி அனுப்பிவிடும் பெருமை கொண்ட மெரினா கடற்கரை உள்ள சென்னை இது.
3. சந்து பொந்து போவதற்கு ஆட்டோ உண்டு சொந்த பந்தம் வருவதற்கு கால் டாக்ஸி உண்டு சென்னையில்.
4. அனைவரும் வந்து வந்து போவதற்கு அரசுப்பேருந்து எந்த ஊரு போக வேண்டுமோ கோயம்பேடு செல்.
5. வேலை இல்லாத அனைவருக்கும் வேலை கொடுக்கும் ஊரு, வெறும் கையாய் வந்தாலும் வெற்றி தரும் பாரு.
6. புயல் என்றாலும் வெள்ளம் என்றாலும் மட்டுமல்ல எதற்காகவும் சுய ஆர்வலர்கள் சுற்றி முகாமிட்டு இணைந்த கைகளாக சேர்வார்கள் சென்னையில்.
8. வங்கக் கடல் ஓரத்திலே வாழ்க்கை நடத்தும் சென்னை எங்கிருந்து வருபவர்களையும் வாழவைக்கும் சென்னை.
9. மந்திரிகள் கூட்டம் எல்லாம் நடத்துகின்ற ஊரு, இது தங்கத்தமிழ் நாட்டின் தலைநகரம் பாரு.
10. பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த சென்னை பொருளாதாரச் சிக்கல் இன்றி வாழ வைக்கும் சென்னை.
11. கூவி அழைக்குது கோயம்பேடு… கூடி கிடைக்குற காய்கறிகளோடு…
12. எரும்பை போல சுறுசுறுப்பு! எங்க சென்னையோட விருவிருப்பு… என்னேரமும் உழைப்பிற்கு… இங்கு எல்லோருக்கும் தலைப்பு இருக்கு…
13. பாமரனுக்கும் படித்தவருக்கும் படியளக்கும் ஒரு பாசமான ஊர், இது நம் சென்னையின் பெரு.
14. சிறு நகரங்கள் என்று பல இங்கு சிதறிக் கிடக்கும் போது பெருநகரம் என்று பெயரெடுத்த சென்னை இது.
15. இயற்கை சீற்றங்கள் பல வந்து சீரழித்து விட்டு சென்றாலும் நாற்றங்கால் போல் வளர்ந்து நலம் ஆக்கிவிடும் சென்னை இது.
16. அன்று ஏரிகளில் இருந்து நீர் கொண்டுவந்து பயிர் வளர்த்த சென்னை, இன்று ஏரியாக்கள் ஆக மாறி பல உயிர்கள் வாழும் சென்னை இது.
17. சாதாரண ரயில் போதாது என்று பாதாள ரயில், பறக்கும் ரயில் விட்டு சிறக்கும் இந்த சென்னை.
18. பெருகியது மக்கள் கூட்டம்… அழுகிறது அழகிய கூவம்… தொழில் மிகு எழில் நகரம்… இங்கு கழிவுகளும் மிக அதிகம்.
19. பிழைப்பு தேடி வந்தவர்கள் பலர்… தலைப்பாக செழித்தவர்கள் சிலர்… உழைப்பால் உயர்ந்தவர் உலர்… உழைக்காமல் எவருமே நம் சென்னையில் இல்லை.
20. தொலைதூர பயணம் செல்ல தொடர்வண்டி நிலையம் கொண்ட எக்மோர் சென்ட்ரலும் தான் எங்கள் சென்னைக்கு அழகு சேர்க்கும்.
21. கோடீஸ்வரனுக்கு இருக்குது மாடி, ஏழைகளுக்கு கிடைச்சது தெருக்கோடி.
22. சென்னையில் தான் உள்ளது தமிழகத்தை ஆளுகின்ற சட்டசபையும் நாட்டுக்கே நோட்டு தோறும் ரிசர்வ் வங்கியும்.
23. அடுக்குமாடி குடியிருப்பில் அடங்கிப்போகுது நாடி… ஆத்து வயக்காடு அழிஞ்சி ஆகுது பார் மாடி.
24. அழகான மவுண்ட் சாலை நெற்றியின் நடுவே எல் ஐ சி கட்டிடம் பார் குங்குமம் போலே.
25. இத்தனை அழகு கொண்ட சென்னை இனம் என்று இன்னும் எத்தனை பேர் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் இன்று.
இதுபோன்று சிறப்பான கவிதைகளை நம் தளத்தில் உள்ளது படியுங்கள்,