பார்ப்பதற்கு கரடு முரடாகவும் பூப்போன்று தோற்றமளிக்கும் இந்த அண்ணாச்சி பழம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. இந்த அண்ணாச்சி பழம் எல்லா காலங்களில் கிடைத்தாலும் இது ஒரு கோடைகால பழம் ஆகும். புளிப்பும் இனிப்பு சுவையும் உடைய அன்னாச்சி பழத்தை பற்றிய நன்மைகளை காண்போம்.
1. அண்ணாச்சி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடைய இந்த அண்ணாச்சி பழத்தில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, வைட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது.
2. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடைய இந்த அன்னாச்சி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுவதால், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அடிக்கடி நோய்வாய்படுபவர்கள் அண்ணாச்சி பழத்தை உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுவதை தவிர்க்க முடியும்.
3. செரிமான பிரச்சனையை சரி செய்யும்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு அண்ணாச்சி பழத்தை உண்டு வந்தால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். மேலும் அண்ணாச்சி பழத்தில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் பிரமலின் இருப்பதால் நம்மை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக சளி இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. எலும்புகளை உறுதியாக்கும்
சுவை மிகுந்த இந்த அண்ணாச்சி பாலத்தில் அதிகளவு மாங்கனிசு சத்து உள்ளதால் இவை எலும்புகளை உறுதியாக்கிறது. மேலும் இந்த அண்ணாச்சி பழங்கள் இணைப்பு திசுக்களை நன்கு வலுப்படுத்துகிறது. தொடர்ந்து அண்ணாச்சி பழத்தை உண்டுவர பற்கள் மற்றும் ஈர்கள் நன்கு வலிமை பெறும். தினமும் ஒரு கப் அண்ணாச்சி பழத்தை உண்டுவர நமது எலும்புகள் நன்கு வலுப்பெறும். ஒரு கப் அண்ணாச்சி பழத்தில் கிட்டத்தட்ட 73 சதவீதம் மாங்கனிஸ் நிறைந்துள்ளது.
5. கண்பார்வையை தெளிவடைய செய்யும்
இந்த காலத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண் பார்வை குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் அண்ணாச்சி பழத்தை தினமும் உண்டு வர அதில் உள்ள பீட்டா கரோட்டின் அவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி, கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க இந்த அண்ணாச்சி பழம் பெரிதும் உதவுகிறது.
6. மூட்டுகளை வலுப்பெறச் செய்யும்
அண்ணாச்சி பழத்தை ஆர்த்தரடிஸ் நோயாளிகள் உண்டு வர மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து மூட்டுகள் வலி பெறும். அண்ணாச்சி பழத்தில் உள்ள ப்ரொமைலின் சைனஸ் மற்றும் தொண்டைப்புண் போன்றவற்றை சரி செய்ய மிகவும் உதவுகிறது.
7. புற்றுநோய் உருவாவதை தடுக்கும்
சுவை மீது இந்த அண்ணாச்சி பழத்தில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் சரும செல்கள் பாதிப்படைவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் உருவாவதையும் தடுக்கிறது. புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
8. இதயத்தை பாதுகாக்கும்
அண்ணாச்சி பழத்தை தினமும் கொண்டு வருவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுத்து இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
அண்ணாச்சி பழத்தில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் உடலின் மூச்சுக்குழாயில் வீக்கம் காயம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க இது பெரிதும் உதவுகிறது.
9. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்
இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியம் உள்ளதால் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.
10. ரத்தத்தை சுத்தம் செய்யும்
அடிக்கடி நாம் அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகவும் உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
நாம் தினமும் அண்ணாச்சி பழத்தை டயட்டில் சேர்த்து வருவதால் அண்ணாச்சி பலத்தில் உள்ள அதிகப்படியான பிரம்மனின் உடலில் உள்ள புழுக்களை அளித்து செரிமானத்திற்கு உதவுகிறது