இந்தப் பதிவில் உலகில் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரான பிளேட்டோ அவர்களின் பொன்மொழிகள் தான் காணப்போகிறோம்.
பிளேட்டோ அவர்கள் அரிஸ்டாட்டி இன் குருவாகவும் மற்றும் சாக்ரடீஸின் சீடர் ஆக இருந்துள்ளார். இவர் கல்வி மற்றும் அரசியல் பற்றிய சிறந்த தத்துவங்களை உலகிற்கு வழங்கியுள்ளார்.
பிளேட்டோ தத்துவங்கள் | Plato quotes in tamil
ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதுபோல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.
-பிளேட்டோ
மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
-பிளேட்டோ
நாம் பார்க்கும் உலகம் வேறு, நம்மால் அறியப்படும் உலகம் வேறு.
-பிளேட்டோ
பேராசையை விலக்குங்கள் உங்கள் சொத்து செழிப்படையும்.
-பிளேட்டோ
மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.
-பிளேட்டோ
நாட்டுப் பற்றைவிட நெருக்கமான அன்பு வேறில்லை.
-பிளேட்டோ
வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனைக் கோழையாக்கிவிடும். ஒழுக்கமில்லாத வீரம் முரடனாக்கிவிடும். இரண்டும் இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.
-பிளேட்டோ
ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்துகொண்டே போகும்.
-பிளேட்டோ
கலைகள் அனைத்திலும் அதி உன்னதமான கலை மனிதன் எப்படி இருக்க வேண்டும், எதை தேட வேண்டும் என்பதைப் போதிக்கும் கலையே ஆகும்.
-பிளேட்டோ
யாரிடம் தத்துவ ஞானமும், தலைமைப் பண்பும், அறிவுத்திறனும் இருக்கிறதோ அவரிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் அல்லது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவருக்கு மேற்கொண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.
-பிளேட்டோ
மெய்யறிவாளர்கள் அரசியல் நிர்வாகத்தை அடைய வேண்டும் அல்லது அரசியல்வாதிகள் ஏதாவதொரு அற்புதத்தினால் மெய்யறிவாளர்களாக மாறவேண்டும். அதுவரை மனித ஜாதியானது தீமைகளில் இருந்து விடுதலை காணாது.
-பிளேட்டோ
நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்.
-பிளேட்டோ
மேலும் இது போன்ற சிறந்த ஞானிகளின் தத்து வத்தை கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்,