Fidel Castro quotes in tamil – கியூபா நாட்டில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம் அதாவது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை விட கியூபா கண்டத்திலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இத்தகைய செயலுக்கு பெருமை மிக்கவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் கியூபா நாட்டில் உள்ள உழைப்பாளிகளுக்கு போராடி தனக்கென வரலாற்றில் தனி பக்கத்தை பிடித்தவர் மற்றும் இவர் சிறந்த போராளி ஆவார்.
இந்த பதிவில் இத்தகைய சிறப்பு மிக்க மனிதராக இருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள் | Fidel castro quotes in tamil
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் .தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்.
-பிடல் காஸ்ட்ரோ
புரட்சி என்பது ஆண்கள் சார்ந்தது மட்டுமல்ல பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி.
-பிடல் காஸ்ட்ரோ
தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார்.
-பிடல் காஸ்ட்ரோ
போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள், வென்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்.
-பிடல் காஸ்ட்ரோ
நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால் அது நீ போகும் பதையே அல்ல வேறு யாரோ போன பாதை.
-பிடல் காஸ்ட்ரோ
நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற, செய்ய நினைக்கிற பணிகளை நான் பிறருக்குத் தருவதில்லை. எனக்கு வேலை செய்யப் பிடிக்கும். காலம் முழுவதும் நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன்.
-பிடல் காஸ்ட்ரோ
நூலகங்களையும், புத்தகங்களையும், பட்டியலையும் பார்க்கும் போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும், கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று வருந்துகிறேன்.
-பிடல் காஸ்ட்ரோ
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
-பிடல் காஸ்ட்ரோ
பசியினால் திரிகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள்கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.
-பிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் தத்துவம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
இது போல் மேலும் என்ன தத்துவம் என்றும் வேண்டும் என்று கமெண்டில் கூறுங்கள்.
மேலும் தத்துவம் மற்றும் பொன்மொழிகளை படிக்க கீழே காணுங்கள்,