Bharathiyar quotes in tamil – இந்தப் பதிவில் தமிழ் கவிஞர்களில் மிகவும் சிறப்புடைய சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.
சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் | Bharathiyar quotes in tamil
1. தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்.
2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
3. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.
4. செய்வதை துணிந்து செய்.
5. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.
6. நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.
7. எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.
8. அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.
9. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை.
10. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.
11. எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.
12. நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.
13. கவலையும்,பயமும் எனக்கு பகைவர்.நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்.அதனால் மரணத்தை வென்றேன்.நான் அமரன்.
14. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்.
15. கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
16. இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
17. வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
18. பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!
19. இந்த உலகில் நீங்கள் சில காலம் தங்க வந்திருக்கும் விருந்தினர்தான். எனவே விருந்தாளின் வீட்டில் எப்படி கட்டுப்பாட்டுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வீர்களோ அதுபோலவே நடந்து கொள்ளுங்கள்.
20. இழிசெயல்கள் எதுவும் உங்களைப் பிடித்து தம்வழி இழுத்துக் கொண்டு செல்லாதபடி சதாகாலமும் விழிப்புடன் இருப்பீர்களாக, பயமின்றி உழையுங்கள். சலிப்புக்கு மட்டும் ஒருபோதும் இடம் கொடாதீர்கள்.
21. கோவிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி,கடவுளை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள் புரிய தடையேதுமில்லை.பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்,தெய்வ அருளுக்கு பாத்திரமாகிவிடுவோம்.
இது போல் மேலும் பல பொன்மொழிகளை காண,
very useful articels written by author its very useful read online I love to bharathiyar quotes in tamil today search for bharathiyar quotes in tamil I find your sites top page its very important to know everything about bharathiyar thank for sharing the useful quotes to me…
Thanks for comment…