Kaatru Kavithai in tamil – இந்தத் தொகுப்பில் நாம் காற்று பற்றிய கவிதைகளை தான் காணப்போகிறோம்.
Kaatru kavithai in tamil | காற்று கவிதைகள்
1. தெற்கிலிருந்து தென்றல் காற்றாய் வந்தாய் வடக்கிலிருந்து வாடை காற்றாய் வந்தாய் கிழக்கில் இருந்து கொண்டல் காற்றாய் வந்தாயே மேற்கிலிருந்து மேலை கற்றாய் வந்தாய்.
2. நீ மழைச்சாரலாய் வந்து குளிரில் மலர்களை நடுங்க வைத்து வேடிக்கை பார்க்கிறாய் உன் வருகையிலே இசைத்திடும் கீதம் ஸ்வரங்களில் எட்டாவது ராகமோ!
3. நீ வந்தால் அனைவரும் சிரிப்பார்கள் நீ தொட்டால் அனைவரும் சிலிர்ப்பார்கள்.
4. மெதுவாய் இதமாய் வீசுகிறாய் முகத்தின் அழகை காட்டுகிறாய்.
5. உலகின் நீ தானே நீ முடிந்து போனால் என்னாவேன்.
6. இறைவன் இருக்கும் இடத்தில் எல்லாம் துணையாய் நீயும் இருக்கின்றாய்.
7. மிதமான வேகத்தில் வெண்மையான காற்றாய் வந்தாய் இதமான வேகத்தில் இளம் தென்றல் காற்றாய் வந்தாய்.
8. இசையின் முதல்வன் நீதானே அதை இயக்கும் கருவியும் நீதானே.
9. உயிரையும் உடலையும் சுமை கின்றாய் அதை பதமாய் மயங்க வைக்கின்றாய்.
10. ஜாதி மதம் பார்ப்பதில்லை அதில் வேறுபாடு காட்டுவதில்லை அப்படி நீ பார்த்திருந்தால் பல உயிர்கள் இங்கு இல்லை.
11. உலகில் வாழும் உயிர்க்கு எல்லாம் வயது ஒன்று இருக்கிறதே உனக்கு வயது இருக்கிறதா.
12. உனக்காய் தனியாய் வாழ்ந்தது இல்லை உயிருக்காக வாழ்கின்றாய்.
13. ஒளியின் மொழியே நீ தானே நீ முடிந்து போனால் என்னாவேன்.
14. ஒரு சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் தூக்கம் வராது அப்பொழுது நீ மெல்ல வந்து அனைவரையும் தூங்க செய்வாய்.
15. மெல்லமெல்ல தழுவும்போது மழையாய் தெரிகிறாய் வாரி என்னை அணைக்கும் போது அன்னையாய் தெரிகிறாய் நீ மழைச்சாரலாய் வரும் போது மண் மனதை அள்ளிக் கொண்டு வருகிறாய்
16. நான் கண் மூடி தூங்க நீ தாலாட்டும் போது மரங்களும் தலையசைக்க எங்கே நீ போய் விடுவாயோ என்று தூங்காமல் விழித்திருக்கிறேன், மெய்மறந்து ரசிக்கின்றேன், மூச்சினிலே கலக்கின்றேன்.
17. தென்றல் காற்றே, பொதிகை மலை தோன்றி பவனி வரும் தென்றலே நீ பாலைவன தென்றலாய் கடந்து சோலைவனம் தென்றலாய் என்னைச் சேர்ந்து விடு.
18. இங்கு மலர்கள் தலை சாய்ந்து இருப்பது கோபமா? இல்லை இல்லை உன் வருகை கண்ட நாணம் தான் அது.
இது போல் இயற்கை பற்றிய கவிதைகளை மேலும் படிக்க,