Nila kavithai in tamil – இந்தத் தொகுப்பில் நிலாவின் அழகை வர்ணித்து அழகான நிலா கவிதையை காணப்போகிறோம்.
Nila kavithai in tamil | நிலா கவிதைகள்
1. கடவுள் கவிதை எழுத வானத்தில் குண்டு பல்பை தொங்கவிட்டான்… கவிதையை முடிக்கும்போது அமாவாசையாக மறையவும் வைத்தான்…
2. ஆகாயத்தின் அழகு நீ..! அதிசயத்தில் ஒருத்தி நீ..!
3. சேதாரம் இல்லாத சுத்த தங்கமாய்! சேர்த்தாய் கவிஞருள் கற்பனை சுரங்கமாய்!
4. எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும் எட்டிப் பிடிக்கிறது என் எண்ணங்கள் உன்னை.
5. மாடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்! தெருக்கோடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்!
6. மண்கொண்ட புல் மகனும் இரவிலே உன்னை பார்த்து வியந்தான் ஓ!
7. அவள் கீழே இறங்கி வந்தாள் இப்பூமி பெண்கள் பொறாமை கொள்வார்கள் என தெரிந்ததே.
8. ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியில் பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் ஒரு அழகான குண்டு நிலாவே.
9. காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ!
10. பாதி நாள் கருப்பு, பாதி நாள் வெள்ளை, சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ!
11. வட்ட முக பேரழகி கடவுளின் ஒப்பனையால் கருத்த முகம் வெளுத்து போனதே…
12. வானில் வரைந்த சித்திரம், வாடாத மலர்ந்த என் மலரோ, இரவு வானில் உலவுபவள் இன்முகம் காட்டும் நிலவு அவள்.
13. சொப்பனம் என்ற இரவில் கூட சொர்க்கமாக வந்தாயோ இல்லை, சொர்க்கமான வாழ்வு என்பதை சொப்பனம் ஆக்க வந்தாயோ.
14. நிலாவை வானத்தில் தங்கவைத்து ஆண்களை ஏங்கவைத்த இறைவன் கொடியவனே.
15. மூக்கும் இல்லை மூலியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா…
16. இப்பூமி மக்கள் இரவு நீங்கி வெளிச்சத்தைக் காண அன்போடு பௌர்ணமி வரவேற்கும் போது கடவுளின் சத்தியால் எடிசன் பிறந்தானோ..!
17. அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே! பாங்குடனே நீயும் தான் பறந்து தான் வந்தாயோ?
18. துணி தைக்க தெரியாமல் அம்மாவாசை மேல் வெள்ளைத்துணி போர்த்திவன் எவனோ!
19. நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே நிலா மகளின் வான் வீதி உலா.
20. தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க நிலா வந்ததோ!
21. காட்டு வழி நடப்போருக்கு ஏற்ற வழி தெரிய ஒளி மழை தான் நிலாவோ!
22. நீ பாதியாய் இருந்தாலும், அழகு ஜோதியாய் திரிந்தாலும் அழகு.
23. என்னவென்று சொல்வதம்மா உந்தன் அழகினை.
24. தன் குளிராய் தரித்தவளே! விண் ஒளியாய் ஒளிர்பவளே! வெள்ளி தகடாய் மிளிர்பவளே!
25. சில வாரங்கள் குட்டையாய் சில வாரங்கள் வட்டமாய்.
26. குளிர்ச்சி என்றும் உந்தன் முகத்திலே நான் உன்னை பார்க்கும் பொழுதினிலே.
27. இரண்டு விட்ட ஆகாயம் கூட உன்னால் லேசான வெளிச்சம் பெற்றிட! இருண்ட வாழ்வில் மட்டும் வெளிச்சம் தர மறுத்தாயோ!
28. சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்கிறது உன் பின்பம்.
29. உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளே!
30. பகல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காத்தயோ.
31. ஊடல்சற்று மறைந்தது மேகூடல் கொண்டு விட்டாயோ வெட்கத்தில் முகம் மலர்ந்து பௌர்ணமியாய் சிரித்தாயோ.
இது போன்ற கவிதை மேலும் படியுங்கள்,