Abdul kalam Kavithai in tamil – இந்தப் பதிவில் நம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து தமிழர்களின் புகழை உலகம் வரை எடுத்துச் சென்ற ஐயா அப்துல் கலாம் பற்றிய கவிதைகளை தான் காணப்போகிறோம்.
Abdul kalam kavithai in tamil | ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கவிதைகள்
ஏவுகணை நாயகனே! காலமும் சலாம் போடும் கலாம் ஐயா!
வீசும் காற்றும் உன் புகழை பேசும்! பெருமை கொள்கிறது நம்முடைய தேசம்.
ஒளியாக உமது பொன்மொழிகள் உளியாக உள்ளத்தைச் செதுக்கும்.
ராமேஸ்வரத்தின் முத்தே! தேச மக்களின் சொத்து!
இளைஞர்களின் எழுச்சியே! உள்ளம் ஒன்று இருக்கிறது அதில் உந்தன் பேரை ஒலிக்கின்றது கலாம்!! கலாம்!!!
கூறினீர்கள் எங்களை கனவு காண, இன்று நாங்கள் கனவு காண்கிறோம் உங்களைப் போல ஒரு தலைவனுக்காக.
விஞ்ஞான புறா அக்னி சிறகோடு பறக்கிறதே! உந்தன் மனித நேயம் கண்டு மேகமும் மெய் சிலிர்க்கிறதே!
உயரம் தொட்டும் உலகம் சுற்றியும் எளிமை மாறவில்லை! உங்களை போல இம் உலகில் யாருமில்லை!
கனவு காண சொன்ன இளைஞர் நாயகனே! அக்னி சிறகு தந்து ஆயத்துரங்க சென்றாயோ!
சூரியனுக்கு தெரியாது சூரியன் உன் நகல் என்று.
அறிவாற்றல், அறிவியலாற்றல் எழுத்தாற்றல், சொல்லாற்றல், செயலாற்றல் நிறைந்த முயற்சியின் முழு உருவமாய் அப்துல் கலாம் அவர்களே.
அசாதாரண சூழ்நிலைகளை சாதகமான சூழல் ஆக்கி சாதனைகள் கண்ட அப்துல் கலாம் அவர்கள்.
சோதனை உன்னை சோதித்து நின்றதும்! உந்தன் அறிவால் சாதித்து வென்றதும்! சரித்திரம் சொல்கிறது கலாம் ஐயா! சரித்திரம் சொல்கிறது!
கடமையே நமக்கு கண் போன்றது என்பதை எடுத்து வைத்தவர் இவரே!
விண்ணை அளக்கலாம், மண்ணை நேசிக்கலாம், அறிவியலை கைக்குள் அடக்கலாம், அன்பால் அனைவரையும் ஈர்க்கலாம், அது தான் அப்துல் கலாம்.
பிறந்தது இந்தியாவிலே! உழைத்ததும் இந்தியாவுக்காக! மறைந்ததும் இந்தியாவிலே!
சிறைக் இன்றித் தவித்த பாரத நாட்டிற்கு உங்களின் அக்னி சிறகுகள் தந்தீர்! இருளில் இருந்த இளைஞர்களின் வாழ்வில் பல எழுசி தீபங்கள் தந்தீர்!
விழித்திருக்கும் போது கனவு காண்கிறேன் இரண்டு விழிகளிலும் நீங்கள் தானே ஐயா.
வீடு வீடாய் செய்தித்தாள் போட்டவர், ஒருநாள் செய்தித்தாள் தலைப்பு செய்தியாக மாறலாம் என்பதற்கு நம்பிக்கை கலாம் ஐயா!
ஏவுகணை நாயகனே ஏங்குகிறோம் மீண்டும் நீங்கள் ஒருமுறை பிறந்து வர.
வழுக்கை விழுந்தால் அறிவாளிகள் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் கலாம் தலைக்குள் ஆயிரம் முளைகள் பார்த்த பிறகு என் எண்ணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டேன்.
கடலில் படகோட்டும் தந்தையின் மகன் விண்ணில் செயற்கைகோளை விதித்தது அப்துல் கலாமின் சாதனை.
ஆயிர வருடம் ஆனாலும் உங்கள் வரலாறு மறையப் போவதில்லை.
குழந்தைபோல் சிரித்திடுவாய்! மனதில் உள்ளதை பேசிடுவாய்!
கனவு காணுங்கள் என்று கூறிய கதாநாயகனே என்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் பெரிய இடம் உண்டு.
அக்டோபர் 15 விஞ்ஞான உலகத்திற்கு வந்த வரப்பிரசாதம்! ராமேஸ்வரத்தில் பிறந்து விஸ்வரூபம் எடுத்த மாமனிதர்! உங்கள் புகழை போற்றி என் கவிதை வரிகளை பற்றவில்லை..!
இதுபோன்று மேலும் பல மாமனிதர்கள் பற்றிய கவிதைகளை படிக்க,