Malai kavithai in tamil – இயற்கையில் உள்ள அனைத்தையும் விட மழை ஆனதே மிகவும் அழகானது. அந்த மழை பற்றிய கவிதைகளை தான் இந்த தொகுப்பில் காணப்போகிறோம்.
Malai Kavithai in tamil | மழை பற்றிய கவிதைகள்
1. சிலுசிலுவென போலிகின்றாய்! சிறு துளியாய் விழுகின்றாய்!
2. மழையே நான் நனைக்கிறேன் உன் சாரலில்! துடிக்கிறேன் உன் தூரலில்!
3. சிறகில்லாமல் பறக்கிறேன், கவலை இருந்தும் சிரிக்கிறேன் உன்னை பார்த்ததால்.
4. உன் வருகைக்கும் முன்னே குளிர் காற்றை அனுப்பி மண் மட்டுமல்ல விவசாயிகளின் மனங்களையும் குளிர் வடையா செய்தாயே.
5. மழையே மெல்ல மண்ணில் விழுந்து, எழுந்து உயிருடன் கலந்தாய்! பல விவசாயிகளின் உயிரையும் காத்தாய்!
6. மழைத்துளி இசையால் மனம் காகித கப்பல் போல் மிதக்கும்மே! ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உடனே என்னை விட்டு விலகி செல்லுமே!
7. பூமிக்கு நீ தந்த வருகையால் மலர்ந்தது மலர்கள் மட்டுமல்ல மக்கள் மற்றும் விவசாயிகளின் மனமும் தான்.
8. உன் சின்ன தூறல் இசைகேட்டு! உன் செல்ல மழையின் குரல் கேட்டு! உன்னில் இன்று விழிக்கிறேன்!
9. உருமி மேளம் இடி முழங்கி வரவேற்ப்பை தருகிறாய்! வாசல் வந்து வரவேற்றால் கண்டு கொள்ளாமல் போகிறாய்!
10. வண்ண வண்ண கலர் பூசி வானவில்லாய் ஒளிகிறாய்! வையகத்திற்கும் உயிர் தந்து உன்னை நீயும் இழக்கிறாய்!
11. மெல்ல மெல்ல கரைகிறேன் உன் மழை பொழிவாள்! நீ செல்ல செல்ல உறைகிறேன் நீ போன பின் அடிக்கும் குளிர் காற்றால்!
12. ஏன் வந்தாய்? ஏன் சென்றாய்? புரியவில்லை, உன் இன்ப சாரலில் நனைகையில்.
13. கார்மேக கூந்தல் கொண்டு கட்டி அணைக்க நீ வந்தாய்! சற்று நிமிடம் ஆடிப்போனேன் உந்தன் உடல் (மழைத்துளி) பட்டதும்!
14. கடலில் நீ விழுந்து கனிம நீர் ஆனாய்! தரையில் நீ விழுந்து கரிம நீர் ஆனாய்!
15. மழையில் நனைவது அதைவிட அழகு! மழையின் இடையே வெயில் பேரழகு! மழையில் குழந்தையின் காகித கப்பல் அழகோ அழகு! மழைக்குப்பின் மண்வாசனை அற்புதமான அழகு! மழை இரவின் குளிர் அழகே அழகு! அடுத்தநாள் பெய்யும் மழை அதனினும் அழகு! மொத்தத்தில் மழையே ஒரு அற்புதமான அழகு!
16. மலையே உன் வருகையால் எண்ணற்ற மகிழ்ச்சிகள் விவசாயின் மனதிற்குள் ஓடையாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
17. கார்மேக தோட்டத்தில் பூத்த கண்ணாடிப் பூவே! காற்றில் பறந்து என் மீது விழுந்தாயோ!
18. உன் சத்தம் கேட்க நித்தம் என்கிறேன் உலகின் கவலையும் பிறந்தேன் உயிருடன் இணைந்தேன் உன்னுடன் இன்று உன் நுழைந்தேன்.
19. விண்ணில் தோன்றும் முத்துக்களே! மண்ணில் விழுந்த வித்துக்கலே!
20. கொட்டும் மழையை, நீ கொட்டும் அழகை ரசிக்க ஒரு யுகம் போதுமா?
21. அகத்துக்கு மகிழ்ச்சியும் புரத்துக்கு குளிர்ச்சியும் தருவாய் நீ.
22. மேளதாளத்தோடு வரும் நீ, மின்னலாய் நிற்கின்றாய்! கள்ளனாய் இனிகின்றாய்!
23. பூமி பெண் தேடும் வானவில் உயிர்த்துளியே! கொஞ்சம் பூமிக்கு வந்து குடமுழுக்கு செய்து விடு!
24. காகிதக் கப்பல் விட்டு மழையில் ஆடியதும் கருப்பட்டி காப்பியை கடும் மழையில் தேடியதும் பல காலங்கள் ஆனாலும் மறப்போமா?
25. கானல் நீருக்குள் கட்டுண்ட பூமிதனை அர்ச்சனை அரிசி போல அவ்வப்போது தூவித்தொடு.
26. பானையில் உனைவீழ்த்தி இனிமேல் நான் குடிப்பேன் தேனி இல்லை இனி உன்னை கூட செயற்கையாய் தான் படைப்பேனோ!
27. மாதம் மும்மாரி மழை பொழிந்த காலம் போச்சு! திரைப்படங்கள் கூட இன்று மழை காட்சியை மறந்து போச்சு!
28. கைபேசி காதல் போல மழைக் காலமும் மாறி போச்சு! முத்தமும் மொத்தமும் முகம் காட்டாமலே முடிஞ்சு போச்சு!
29. வானத் தேன்தட்டில் வடிகின்ற தேன்துளியே! மேக கிளை முறிந்து பூமி வந்த நீர் கனியே!
30. உன்னை ரசிக்கத் தெரிந்த என்னை உரசிப் பார்க்க வந்தாயே! தொட்டு சென்ற நீ – உன் குளிர்ச்சியை மட்டுமே விட்டு சென்றது ஏனோ.
31. குடை கொண்டு உன்னை தடுக்க விரும்பாமல் கை விரித்து தலை உயர்த்தி உன்னை ரசிக்கிறேன்.
32. ஊசி போல் நீ வந்தாலும் என்னும் வழி ஏதும் தராமல் இறங்கினாய்! எண்ணில் கரையாய் படித்த கவலைகளை மழையாய் வந்து நீ நீக்கி சென்றாய்!
33. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தூதுவனாய் வந்தாயே! நீரின்றி அமையாது உலகில் இங்கு அந்நீரையும் நீ இன்றி தந்தாயே.
34. நெருங்கி நீயும் வந்தால் நெஞ்சமெல்லாம் பரவசமாய் ஆகுதே, உன்னிடமே தஞ்சம் பெற்று சரிந்து போனேன் உன் இதயத்தில்.
35. நெஞ்சில் புகுந்து கூசுகிறாய்! குழந்தை மாதிரி எனக்கு உள்ளே! கொட்டாங்குச்சியில் கொடுக்கிறாய்! இதமான குளிர்ந்த தேநீரை.
36. மஞ்சள் நிற வெயில் கூட உன்னை பார்த்து மறைகிறது! உன் மீது உள்ள பயத்தால் தான் சூரியனும் கரைகிறது!
37. உச்சி முதல் பாதம் வரை எனை உரசி ரசிக்கிறாய்! தூர நின்று நான் பார்த்தால் ஊத காற்றாய் பாய்ச்சுகிறாய்!
38. மண் மீது உள்ள காதலால் மெய்மறந்து சாய்கிறாய்! மாடி வீட்டு தோட்டத்திற்கு உன் சுவாசம் தருகிறாய்!
39. மழைக்காக சூழ்ந்த மேகங்கள், மழையால் குளிர்ந்த பூச்செடிகள், மண்வாசனை மனம் விச, மழையின் இசையில் மயிலாட, காற்றோடு காற்றாக மரங்களும் ஆடும் இசையோட, முத்துப்போல மழைத்துளிகள் முத்தாய் இவ்வுலகில் விழுந்திடுங்கள்.
இந்தக் கவிதை மழையை ரசித்து, இன்று மழைக்காக ஏங்கி நிற்கும் என் போன்ற எத்தனையோ உள்ளங்களுக்கும் மற்றும் நம் விவசாயிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
மலையைப் பற்றிய கவிதைகளை போல பல இயற்கை கவிதைகளை படிக்க,
இயற்கை கவிதை | Nature quotes in tamil
காற்று கவிதை | Kaatru Kavithai in tamil
hloooo
விண்ணில் தோன்றும் முத்துக்களே! மண்ணில் விழுந்த வித்துக்களே!தங்கள் எண்ணம் சுகமானது … அதில் விளைந்த கவிதை என்னுள்ளே விதையானது …
அருமை இதுபோன்ற கவிதை நான் கன்றதிலை