Nature quotes in tamil – இந்தத் தொகுப்பில் நாம் இப்பொழுது இயற்கை அழகை வர்ணித்து மற்றும் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இயற்கை கவிதையை பார்க்கப் போகிறோம்.
இயற்கை கவிதை | Nature quotes in tamil
வண்ணத்துப்பூச்சி இடம் வாங்கி கொண்டாயோ சின்ன சின்ன மலர்களே! கண்ணைப் பறிக்கும் உன் வண்ணங்களை.
கலைந்து சென்ற மேகங்கள் வரைந்து சென்ற ஓவியமே நிலா.
மரத்தை நீ அழித்தாலும் உன்னை சுமக்க காத்திருக்கும் சுடுகாட்டில் விரகாக.
மலையின் உச்சியிலிருந்து குதித்தாலும் மரணம் நிகழ்வது இல்லை நீர்வீழ்ச்சிகளுக்கு.
மலைகளை தரணியில் அழகாக சுற்றி வருகிறது பனி! பனியை அன்பாக மேனியில் பற்றி கொள்கிறது மலை!
மழை குழந்தை இடி தாயின் தாலாட்டை கேட்டுவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ…?
காலையில் வீரமாக எழுந்து மாலையில் ஏனோ சந்திரன் காலடியில் போய் சரணாகதியாகிறது அந்த சூரியன்.
தளர்ச்சி களைப்பு எதுவுமின்றி தொடர்ந்து கடக்கும் விண்பயணி….! வெல்ல முடியாத வெள்ளை பேரழகி…! குறைந்து நிறையும் பூரண பால் குடத்தாள்…! நிலா!
இங்கே யாருக்காக குடை பிடிக்கிறது இந்த வானம்?
ஆர்பரிக்கும் கடல் அலை வந்து எதை அடித்து சென்றதோ தெரியவில்லை!.. என் கண்ணீரையும், மனக்கவலையையும் அடித்து சென்றது. மெரினாவில் ஒரு நாள்!
வண்டுகள் உரையாற்றுவதற்காக… செடிகள் தோறும் மலர் மைக்குகள்..!
நீர்வீழ்ச்சியாக பிறந்து நதியாக நடை பழகுகிறது மழை.
மேகம் கருத்திருச்சு! நல்ல மழைபொழிந்திருச்சு! நாடும் செழித்திருச்சு! நல்ல நேரம் வந்திருச்சு!
கோடிக்கணக்கான வெள்ளிகளின் நடுவில் ஒரு வட்டமான ஒற்றை நாணயம்… நிலா!
நட்சத்திர ஈட்டியின் காவலில் நடமாடும் ராணி நிலா…!!
எல்லோரது வீட்டு வாசலிலும் தண்ணீர் விநியோகம் செய்தது காசு வாங்காமலே மழை..
நலம் விசாரிக்க நாதியின்றி நடுவானில் நடைபிணமாக நிலா…!!!
காலையில் சூரிய கோயிலின் கதவுகளை திறப்பது யார்? மாலையில் நடையை சாத்துவது யார்?
ஏழையின் குடிசையில் அழைக்காத விருந்தாளி மழை நீர்.
ஆறுகள் அன்னையை தேடி ஓடுகிறது கடல்.
யாரை விரட்டி பிடிக்க ஆக்ரோஷமாக கரைக்கு ஓடி வருகிறது அந்த அலைகள்.
வானம் பூமிக்கு அனுப்பும் செயற்கை கோள் மழை.
இரவென்னும் போர்வையில் அங்கங்கே சிறிய சிறிய ஓட்டைகள் தெரிகிறதே! நட்சத்திரங்கள்.
பகலில் பூத்தால் பரிக்கலாம் ஆனால், அது இரவில் பூக்கிறதே! நட்சத்திரங்கள்.
விண்மீன்களை புள்ளியாக வைத்தது போதும்! கோலமிட நிலாமகளை தேடுகிறது வானம்..! அமாவாசையன்று.
பசுமையின் வீட்டில் விடியும் வரை படுத்து உறங்குகிறது பனிகளின் கூட்டம்.
உரசி சென்றால் தென்றல்! உறுமி சென்றால் புயல்!
மழையில் குளித்த இலைகள் இன்னும் தலை துவட்டிக் கொள்ளவில்லை..!
நிலவும் சிறகடித்து பறக்கட்டுமே! பூமியும் சக்கரம் கட்டி சுத்தட்டுமே!
உனக்கும் ஒரு கால் கட்டு போட்டால் தான் காதலனை தேடி கரைக்கு ஓட மாட்டாய் அலை மகளே..!
அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்.
முகம் கழுவியது மேகம், சுத்தமாகிறது பூமி. இப்படிக்கு மழை.
கொட்டித்தீர்த்த கோடை மழை குடை பிடிக்கும் காளான்கள்.
வானம் கருமேக காகிதத்தில் விடிய விடிய எழுதி தூக்கி போட்ட மழை கவிதைகளை படித்து விட்டு பூமியே குளிர்ந்து போனது.
இதுபோல பல இயற்கையை வர்ணித்த கவிதைகளைப் படிக்க,
பூக்கள் கவிதை | pookal kavithai in tamil
Who is the writer
this quotes are collected from various source. so credit goes to respective author and i dont know who was wrote this quote.