இந்த பதிவில் சீன நாட்டின் தத்துவஞானியாக விளங்கும் கன்பூசியஸ் பொன்மொழிகள் தான் இப்பொழுது காணப்போகிறோம்.
கன்பூசியஸ் பொன்மொழிகள் | confucius quotes in tamil
சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு.
தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்; தீயனவற்றை விற்குமிடமே நாக்கு.
நீ ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
சிறிய விஷயங்களில் பொறுமை காட்டா விட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன.
உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக் கூடிய பெரிய மனிதர் உங்களைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன் பாம்பை மனதில் வளர்க்கிறான்.
ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கும் அளவிற்கு நம் செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன.
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்.
ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லார் கண்களும் அதைக் காண்பதில்லை.
அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
மனதைக் கடமையில் செலுத்துங்கள். ஒழுக்கத்தைக் கடைபிடிங்கள். அன்புக்குக் கட்டுப்படுங்கள்.
மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.
நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள்.
புகழைப் பொருட்படுத்தாதீர்கள் ஆனால் புகழ் பெறுவதற்குத் தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தைத் திறக்கிறாய். ஆகவே, கவனமாக இரு.
கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி.
உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.
சிறந்த மனிதத் தன்மை அல்லது மேன்மைக்குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல. நீங்கள் விரும்பினால் போதும் அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்.
உயர்ந்த குணமுள்ள மனிதன் தான் எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.
கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.
விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்ற முடியாது.
பெற்றோருக்கான தொண்டு மேலோரிடம் மரியாதை, நண்பர்களிடம் நல்லுறவு நாட்டுக்கான அர்ப்பணிப்பு கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவனாவான்.
இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
உனது வீட்டில் எளிமையாகவும், பணிவாகவும் இரு. தொழில் செய்யும் இடத்தில மதிப்போடு இரு, பழகுபவர்களிடம் விசுவாசத்தோடு நடந்துகொள். நீ காட்டுமிராண்டிகளிடையே வசிக்க நேர்ந்தாலும் இந்த நோக்கங்களைக் கைவிட்டு விடாதே.
தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.
மனத்திடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி செல்வநிலையையும் சரி வெகுநாள் தாங்க முடியாது.
பேசத் தகுந்த மனிதரோடு பேசத் தவறிவிட்டால் நாம் அவரை இழந்து விடுகிறோம். பேசத்தகாத மனிதரோடு பேசினால் நமது வார்த்தைகள் பயனற்று வீணாகி விடுகின்றன. அறிவாளி என்பவன் நல்ல மனிதரையும் இழக்க மாட்டான். வார்த்தைகளையும் வீணாக்க மாட்டான்.
நான் மாறும்போது தானும் மாறியும் நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை, அதற்கு என் நிழலே போதும்.
இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.
இந்த பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள். இது போன்று மேலும் படிக்க கீழே காணுங்கள்,