Buddha quotes in tamil – இந்தப் பதிவில் நமது வாழ்க்கையில் அமைதி, செல்வம் மற்றும் தெளிவான அறிவைப் பெறுவதற்காக புத்தர் பொன்மொழிகளை தான் காண போகிறோம்.
புத்தர் பொன்மொழிகள் | Buddha quotes in tamil
குறை இல்லாதவன் மனிதன் இல்லை.. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.
அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை.
விழுதல் என்பது வேதனை! விழுந்த இடத்தில, மீண்டும் எழுதல் என்பது சாதனை!
மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும் இல்லையெனில், மௌனமாக இருப்பதே சிறந்தது.
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.
எந்தக் காலம் காயைக் கனியாக்குகிறதோ அந்தக் காலம் கனியை அழுகுவும் செய்கிறது.
அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.
ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்லமுடியாது.
இந்தப் பரந்த உலகிலே எதுவுமே நிலையில்லை. நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கிறது. ஆகையால்தான் உலகப் பொருட்களில் இன்பம் காண முடிவதில்லை.
பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே தணிக்க முடியும்.
போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல்.
மூடனை பிறர் அளிக்கத் தேவையில்லை, அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான்.
பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகு சுலபம், ஆனால் தன் குற்றத்தைத் தானே அறிவதுதான் வெகு சிரமம்.
சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைகுள்ளே கட்டுண்டிருக்கின்றனர்.
யார் ஒருவர் சிறிய நற்செயல் செய்தாலும் அவரை மனதாரப் பாராட்டுங்கள், அதுவே அவர் மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதற்கு உந்துதலாக இருக்கும்.
எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பரிச்சனைகளை காண்பார்கள்.
தாமரை இலை மீது தண்ணீர் போலவும், ஊசி முனை மீது கடுகு போலவும் இன்பங்களில் ஒட்டிக்கொள்ளாமல் எவன் இருக்கிறானோ அவனே உயர்ந்தவன்.
பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.
உண்மை நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப்போல அமைதியுடன் இருக்க வேண்டும்.
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்கத்தே, உன் பணியை ஊக்கமுடன் செய்.
நன்மையோ, தீமையோ உனது செயலின் பயனை நீ அடைந்தே தீரவேண்டும்.
பயனில்லாத சொற்களைப் பேசுபவன் வாசமில்லாத மலருக்கு ஒன்று தான்.
நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது.
மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை, அறிவாளிகள் புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
நறுமணம் காற்றடிக்கும் பக்கமாகத்தான் பரவும். காற்றுக்கு எதிராகப் போகாது. ஆனால் நல்ல மனிதருடைய வாசனை காற்றையும் எதிர்த்து எங்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும்.
எதனையும் ஆராய்ந்து பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தால் நம்பு; இல்லையேல் கடவுளே நேரில் வந்து கதறினாலும் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லையோ செயலையோ ஏற்காதே.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
புத்தர் பொன்மொழிகள் போல் மேலும் பல சிறந்த மனிதர்கள் கூறிய பொன்மொழிகளை கீழே கொடுத்துள்ளேன். மறக்காமல் பாருங்கள்,