இந்த பதிவில் அனைவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பொன்மொழிகளை பார்ப்போம்.
முத்துராமலிங்கம் தேவர் பொன்மொழிகள் | muthuramalinga thevar quotes in tamil
சிருஷ்டியிலும் வேடிக்கையுண்டு, வினோதங்கள் உண்டு.
நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள். ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்.
அடுத்த தலைமுறையை சிந்திப்பவன் தேசியவாதி. அடுத்த தேர்தலை சிந்திப்பவன் அரசியல்வாதி.
தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
வீரம் என்னும் குணம்தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது!
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்…? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும், எறும்பு கடிக்கும் போது குமுறாமல் வருடிக் கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்.
ஓடுகின்ற தண்ணீர் ஆன்மீகம். அது மண்ணையும் மனிதனையும் வளமாக்கும். தேங்கி கிடக்கும் குட்டை நீர் நாத்திகம், அது புழு பூச்சிகளை உண்டாக்கி மண்ணையும் மனிதனையும் பாழ்படுத்தும்.
மேலும் இது போன்ற பல பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் அதனை படியுங்கள்.
👍👍👍👍👍👍👍
//அடுத்த தலைமுறையை சிந்திப்பவன் தேசியவாதி. அடுத்த தேர்தலை சிந்திப்பவன் அரசியல்வாதி//
ஹா….ஹஹா… முற்றிலும் உண்மை…