இந்த பதிவில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகள் மற்றும் சிறந்த தத்துவங்களை காணப்போகிறோம்.
Positive Swami Vivekananda Quotes in Tamil | விவேகானந்தர் பொன்மொழிகள்
ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.
சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தண்ணீர் தொட்டி உங்கள் மனமே.
அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே உன்னுடைய பாதையைக் கண்டுபுடி.
உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.
உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
நீண்ட தூரம் ஓடிவந்தால்தான் அதிக உயரம் தாண்டமுடியும்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதே, நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
துருப்பிடிதுத் தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.
எதை நீ நம்புகிறாயோ, அதுவாகவே நீ இருப்பாய்.
பிறரது குற்றங்களைப்பற்றி ஒருபோதும் பேசாதே; அதனால் உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.
எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களை பொறுத்தது.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே! கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே!
கடன்களோடு வாழ்வதை விட இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம்.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
தித்திப்பும், பாராட்டும் அதிகம் போனால் திகட்டிவிடும்.
ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது.
உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.
எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி.
அன்பு ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். பெரிய பெரிய ஆயுதங்களால் வெல்ல முடியாத ஒருவனைக்கூட அன்பு என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்திவிடலாம்.
எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும்.
ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தவறுகளிலிருந்தும் தாழ்வுணர்ச்சியில் இருந்தும் விடுபடுவீர்கள்.
உலகில் பாவம் என்பதாக ஒன்று உண்டு என்றால் அதுதான் ஒருவனின் பயமும் பலவீனமும்.
உன் மனசாட்சிதான் உனக்கு ஆசான், அதைவிட வேறு ஆசானில்லை.
மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.
பலமே வாழ்வு, பலமின்மையே மரணம்.
எஜமானனாக இருப்பதற்கு முன் ஒருவன் வேலைக்காரனாகவும் இருக்க வேண்டும்.
இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
இன்னும் நாம் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெறவேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.
இதயமில்லாமல் வெறும் புத்திக்கூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும்.
வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவுதான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்.
நன்மையைப்போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.
உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.
இரக்கம் உடைய இதயம், சிந்தனை, ஆற்றல் மிக்க மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இம்மூன்றும் நமக்குத் தேவை.
உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.
அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது.
நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை.
கீழ்த்தரமான தந்திரங்களால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
அச்சமே துயரத்தைத் தரும். அச்சமே கேட்டை விளைவிக்கும். அச்சமே மரணத்தைத்தரும். நமது உண்மை நிலையை அறியாததாலேயே நமக்கு அச்சம் ஏற்படுகிறது.
பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில் சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான்.
அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடாகும்.
அன்பு இருந்தால் நீ எல்லாம் உள்ளவன்.
இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.
ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது.
பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவுதான் சக்தி.
வழிபாட்டை விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும் இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும்.
நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.
நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.
முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்கு தானாக வந்து சேரும்.
உன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையையும் நீ அனுபவிக்கிறாய்.
எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
பெருமை, பட்டங்களைப் பெறுவதில் இல்லை. பட்டங்களைப் பெற தகுதியுடைவராக உருவாக்கிக் கொள்வதில்தான் இருக்கிறது.
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.
ஒருவன் முன்னேற முதலில் தன்னம்பிக்கையும் அடுத்து இறை நம்பிக்கையும் அவசியம்.
எது உண்மை, எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதை உடனே நிறைவேற்றுவதே நல்லது.
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
மேலும் இதுபோன்று பல அறிஞர்களின் பொன்மொழிகளை கீழே கொடுத்துள்ளேன்.
சிறப்பு