இந்த கட்டுரையில் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துவ பண்டிகை வாழ்த்துக்களை இங்கு பதிவிட்டுள்ளோம். இந்த வாழ்த்துக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் உங்கள் அன்புமிக்க வாழ்த்துக்களை பகிருங்கள்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas wishes in tamil | Christmas Quotes in tamil
மண்ணுலக மக்களின் பாவ இருள் போக்க விண்ணிலிருந்து இறங்கிவந்த நம் இயேசு பாலனை வரவேற்போம் அவரை போற்றி புகழ்ந்து கொண்டாடுவோம் அனைவருக்கும் இனிய கிறிஸ்துபிறப்பு நல்வாழ்த்துக்கள்.
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
போற்றிப் பாடிக் கொண்டாடுவோம் ஆர்ப்பரித்துக் கொண்டாடுவோம்
இந்த கிறுஸ்துமஸ் நன்னாளிலே கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மேசியா இயேசு ராஜன்
இப்புவியின் நிந்தை நீங்க
கந்தை பொதிந்த கோலமாய்
பாரினில் தோன்றினார்.
இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மாந்தர்கள் காண வாசம் செய்த
மகிமை தேவனை
மண்ணில் கண்டோமே
மகிழ்வோம் கிறுஸ்து பிறந்த இந்நாளிலே
இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா நீ
என் இதயத்தில்
இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
என்னை உணர்ந்திரு என்னோடு விழித்திரு
என்னோடு நினைந்திரு உன்னோடு
இனிய கிறுஸ்தும்ஸ் வாழ்த்துக்கள்.
இன்னே நான்பேசி முடித்தேன்
நீயும் நன்றாக கேட்டுக் கொண்டாய்
இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய்
மாற்றும் இயேசு அற்புதர்
கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த
அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே
இனிய கிறஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மாட்டுத் தொழுவத்து மாபரன்
மண்ணுலக மக்களின் மனதினில்
மங்கா புகழோடு வாழ்ந்திட
மரியின் தியாகமல்லவா மடிந்தது
செல்வ புதல்வா சிங்கார தலைவா
செல்வங்களை நிரப்பிட வா
தெவிட்டாத அன்பு வெள்ளம்
தெருவினில் பாய்ந்தோட
உருவெடுத்து வா
இதயம் கனிந்த கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மாடடையும் குடிலினில்
மாசற்ற மகிமை தேவன்
மண்ணில் உதித்தார்
மரியின் மகனாய்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
கர்த்தரின் வார்த்தைகளை ஏற்று
கட்டளைகளைப் பத்திரப்படுத்து
கனிவாகட்டும் உன் வாழ்வு
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
தூதர்கள் துதித்துப் பாட
மேய்ப்பர்கள் புகழ்ந்துப் போற்ற
சாஸ்திரிகள் பணிந்து துதிக்க
மண்ணிலே சாமதானம்
விண்ணிலே மகா மகிமை
வாழ்வின் இருள் நீங்கி
வெளிச்சம் உதித்து எமக்காய்
வாள் வெள்ளியும் முளைத்தது
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
அன்று ஆயர்கள் கேட்ட
ஆச்சர்ய நற்செய்தியை
நாமும் கேட்போமா
இயேசு நாமக்காய் பிறந்தாரென..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…
உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…
இறைவனின் அருளால் என்றும் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நம்புவோம் ஒரு இந்தியனாக யேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வானத்தில் இருந்து ஒளியாய் வந்தார் ஏசு எனும் ஓர் மனிதகடவுள் ஏசு மனிதர்கள் செய்யும்
குற்றங்களை மன்னிக்க சொன்னார் தந்தையிடம் மீண்டும் பிறப்பார் அந்த ஏசு
என்ற மாமனிதர் ! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தான்டு
வாழ்த்துக்கள் நட்புகளே !!
வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
வேதமாய் வந்துதித்தான்! – வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற விரைவாக வந்துதித்தான்! – அந்த விண்மகன் வந்துதித்தான்!
விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டியஆண்டவன் வந்துதித்தான்! – ஒளி பூண்டவன் வந்துதித்தான்! அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே நலமெலாம் ஏற்றிடுவோம் – யேசு
மலரடி போற்றிடுவோம்! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..
மன்னிப்பை மக்களுக்கு அருளிய
மகா கடவுள் பிறந்த தினம்
மக்களின் துன்பம் மறைந்த தினம்
மகிழ்ச்சி நிறைந்த தினம்..
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்.
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!” – கண்ணதாசன்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்றவன்
தட்டுமுன்னே –
திறந்தே வைத்திருப்போம்..
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்….
மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்….