Mother’s Day quotes in tamil – இந்த உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா போல் யாரும் வர இயலாது. அம்மா கொடுக்கும் பாசத்தை நீங்கள் யார் இடத்திலிருந்தும் பெற இயலாது. இத்தகைய உன்னதமான மற்றும் அன்பான உருவான நம் அம்மாவிற்கு இங்கு சில கவிதைகள் மற்றும் வரிகள் பதிவிட்டுள்ளேன்.
இந்தக் கவிதைகளை அன்னையர் தினத்திறகாக மாற்றி அமைக்கப் பட்டவை இதனை உங்கள் அம்மாவிற்கு பகிர்ந்து வரிகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்துங்கள்.
அன்னையர் தினம் கவிதை | Mother’s Day Quotes in Tamil
“எப்படிப்பட்ட பணக்காரனும் பிச்சைக்காரனாக மாறிவிடுவான் தனது அம்மாவின் பாசத்திற்காக.”
“அம்மா என்றால்? தன் வயிற்றில் உன்னை சுமந்து கொண்டு இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்து உன் பசியை போக்கி தன் பசியையும் போக்கி கொண்டு மறுநாள் காலையில் எழுந்து ஓடுகிறாள் அடுத்த வேளை உணவுக்காக.”
“அம்மா இல்லாத சிலரிடம் சென்றே கேட்டுப்பாருங்கள் அம்மா என்றால் யார் என்று.”
“உன் மேல் அன்பு காட்ட யாரும் இல்லையே என்று நினைக்கும்போது நான் இருக்கிறேன் என்று வருபவள் தான் அம்மா.”
“அம்மாவிற்கு என்று தனியாக கவிதை வேண்டாம் அன்பாக பழகி பார் அம்மாவே ஒரு கவிதைதான்.”
“உன் அன்பின் கதகதப்பும் வலிக்காத தண்டனைகளையும் இனி யாராலும் தரமுடியாது அம்மா.”
“உன் மூச்சடக்கி இன்ற என்னை என் மூச்சு உள்ளவரை காப்பேன் உன்னை.”
“என்னை சுவாசிக்க வைத்த என்னம்மா விற்கான நான் வாசித்த முதல் கவிதை அம்மா.”
“ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைக்கிறாய் அம்மா.”
“அம்மாவை நினைவுபடுத்தும் படி சிலரால் சமைக்க முடியும் ஆனால் அம்மாவை மறக்க வைக்கும் படி யாராலும் சமைக்க முடியாது.”
“வாழ்க்கையில் கடைசி வரை தனக்கென்று சமைக்காத ஒரே ஜீவன் அம்மா.”
“உன் மீது உள்ள அக்கறையில் சமயப் அதனால்தான் அம்மாவின் சமயல் அமிர்தம் போல் இருக்கிறது.”
“அம்மாவின் வயிற்றில் இருந்த வரை தான் அம்மாவின் கஷ்டம் தெரிந்தது வெளியே வந்த பிறகுதான் அம்மாவின் பாசம் தெரிந்தது.”
“அம்மா அன்புக்கும் உனக்கும் அர்த்தம் ஒன்று உன் அன்பை வர்ணிக்க எழுத்தாணிகள் போதாது, வார்த்தைகளும் பற்றாது.”
“ஆருயிரே எனக்கு உயிர் தந்த உறவே தினமும் உறங்காமல் என்னை பாதுகாத்த சிறகே.”
“இமை போல் காத்த கருவே உதரத்தில் சுமந்து உதிரத்தை சுரந்து ஊட்டிய அமுதே”
“ஈடற்ற இதயமே எல்லா உழவிற்கும் ஈடு உண்டு.”
“அம்மா இல்லையென்றால் அனைத்து உறவுகள் சேர்ந்தாலும் ஈடு செய்ய முடியுமா.”
“இந்த உலகிற்கு எப்படி சூரியன் வெளிச்சம் தருகிறதோ அதே போல் நம் வாழ்விற்கு வெளிச்சம் நம் அம்மா.”
“உறங்காத விழிகளே நான் தூங்கும் அழகை நீ ரசிக்க இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தாயோ”
“ஊடலிலும் கூடலே! தவறான பாதையில் தடுமாறிப் போகாமல் உரிமை எனும் உளி பிடித்து என்னை சிலையாக உருவாக்கிய சிற்பி நீ.”
“எனக்காய் வாழும் தெய்வமே எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் எந்தன் முதல் தெய்வம் நீ அல்லவா.”
“ஏர் போல எனை உழுது பார் போற்றும் நற்பயிராய் பசுமையாய் வளர்த்தாயே.”
“ஐயம் தீர்க்கும் என் முதல் ஆசிரியை! எல்லாம் அறிந்த விலை என்றாலும் அறியாதவள் போல் என் மழலை மொழி ரசிப்பதிலே.”
“ஒன்றுமே செய்யமுடியாமல் படுத்தாலும் என் பசி பொறுக்க மாட்டாய்! எப்போதும் நீ என்னை வெறுக்க மாட்டாய்!”
“ஓராயிரம் காலம் நான் வாழ்ந்தாலும் உன் மடி சாயும் ஒரு நாள் என் சொர்க்கம்.”
“நிலவில் கூட களங்கம் உண்டு உன் அன்பில் இல்லை தாயே.”
“அம்மாவின் அன்பை எத்தனை முறை எனக்கு போட்டாலும் விடை தெரியாத கணிதம்.”
“இமை மூடி கிடந்தாலும் இன்பமாய் இருந்தேனே அவளோடு கருவறையில் பஞ்சு மெத்தை எனக்கு இருக்கு கொஞ்சி பேச ஆசையும் இருக்கு.”
“செஞ்சி வச்ச மெத்தை அம்மா மடி ஆயிடுமா வெள்ளை முடி இருந்தாலும் வியர்வையில் நனைந்தாலும் அழுக்காய் இருந்தாலும் அவள் தான் என்னோட அரண்மனை அரசி.”
“ஆயிரம் உலக அழகி வந்தாலும் அவள் தான் என்னோட முதல் அழகி என் அம்மா.”
“அன்பாய் பேசுவாய் என் அம்மா அடிமையாய் மாறுவாள் என் அம்மா என் அன்புக்கு மட்டுமே.”
“அர்த்தமற்ற ஆயிரம் என்னை சுற்றி இருந்தாலும் என்னுள் குடியிருக்கும் ஒரே உறவு அம்மா.”
“உலகமே நான்தான் என்று நினைப்பாள் என் அம்மா! என்னை சுற்றியே வருவாள் என் அம்மா!”
மேலும் இது போன்ற சில கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதனையும் பாருங்கள்.
Super